Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
மெல்பனில் வீட்டு விலை எங்கே விரைவாக அதிகரித்து வருகிறது?
27/07/2025 Duración: 03minமெல்பனில் எந்த Suburbகளில் வீட்டு விலைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன என்ற தரவுகளை Domain நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Australia’s Indigenous education gap and the way forward - பூர்வீகக்குடி மாணவர்களுக்கான கல்வி: இடைவெளியை மூட என்ன வழி?
27/07/2025 Duración: 08minEducation is a pathway to opportunity, but for too long, Indigenous students in Australia have faced barriers to success. While challenges remain, positive change is happening. In this episode we’ll hear from Indigenous education experts and students about what’s working, why cultural education matters and how Indigenous and Western knowledge can come together to benefit all students. - பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விகிதங்கள் குறைந்தளவில் உள்ளதுடன் அவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வீதமும் பல்கலைக்கழக பிரதிநிதித்துவமும் குறைவாகவே உள்ளது. இந்தப்பின்னணியில் கல்வி தொடர்பில் நிலவும் இந்த இடைவெளியை எவ்வாறு மூடுவது என்பது பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
26/07/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (20 – 26 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 26 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
சிட்னியில் குத்திக் கொல்லப்பட்ட பிரபா அருண் குமார்: மரண விசாரணை குறித்த தகவல்கள்
25/07/2025 Duración: 03min10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து கொலைசெய்யப்பட்ட இந்தியப்பெண் பிரபா அருண் குமார் தொடர்பிலான விசாரணை அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
25/07/2025 Duración: 09minஉலகில் பலரும் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினம் ஜூலை 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீச்சல் தெரிந்துவைத்திருப்பது ஏன் அவசியம் என்பது தொடர்பில் சிட்னியில் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரியும் அனுஷா அர்ஜுனமணி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஒரு நாட்டின் மக்களில் பாதிபேர் ஆஸ்திரேலியாவுக்கு வர தயாராகின்றனர். ஏன்?
25/07/2025 Duración: 06minதுவலு மற்றும் ஆஸ்திரேலியா இருநாடுகளுக்கிடையே உருவான 'Falepili Union' வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, துவலுவைச் சேர்ந்த சுமார் 280 குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
‘பாலஸ்தீன தேசத்தை ஃப்ரான்ஸ் அங்கீகரிக்கும்’ - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
25/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 25/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
24/07/2025 Duración: 08minஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வுகள்; தமிழர் பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘விஸ்வம்’ - கிருஷ்ணரும் அவரின் மகளும் உரையாடும் பரதநாட்டிய நாட்டிய நாடகம்
24/07/2025 Duración: 10minலயத்தாண்டவம் பரதநாட்டிய நாட்டியப் பள்ளி நடத்தும் பரதநாட்டிய நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கிருஷ்ணன் மற்றும் அவரின் மகள் உரையாடுவது போல் வடிவமைக்கப்பட்ட நாட்டிய நாடகம் ‘சாருமதி’ அரங்கேறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்கள் ரம்யா ஶ்ரீஷியாம், சந்தியா முரளீதரன் மற்றும் பிரிட்டிகா கிருஷ்ணகுமார்
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
24/07/2025 Duración: 08minகாசா மீதான இஸ்ரேலின் போர்; தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல்; ரஷ்ய பயணிகள் விமானம் விபத்து; ஐரோப்பிய ஒன்றியம்- சீனா உச்சி மாநாடு; இஸ்ரேல் மீதான இனப்படுகொலை வழக்கில் இணையும் பிரேசில்; ஜனநாயகப் பாதையில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி; ஆப்கானியர்களை நாடுகடத்திய ஜெர்மனி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
பூண்டின் மருத்துவ குணங்கள்!
24/07/2025 Duración: 10minபூண்டு - சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மனிதனின் பாவனையில் உள்ளது. பூண்டின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை இலகுவாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். நிகழ்ச்சி ஆக்கம் செல்வி
-
மதுபானத்திற்கு விருது பெற்ற தமிழர் !!
24/07/2025 Duración: 13minதேநீர் அருந்தியிருப்பீர்கள்.... வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்று மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை புரிந்துள்ளார் இரமணன் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் பானத்தைத் தயாரிக்கும் கருத்துருவாக்கம் எங்கே ஏற்பட்டது. அதைத் தயாரிப்பதில் ஏதாவது சவால்களை எதிர்கொண்டாரா, இதற்கான ஆதரவு எப்படியிருக்கிறது போன்ற குலசேகரம் சஞ்சயனின் பல்வேறு கேள்விகளுக்கு இரமணன் 2016ஆம் ஆண்டில் பதில் தந்திருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
UK போலவே, ஆஸ்திரேலியாவிலும் வாக்குரிமை வயதை 16 ஆக குறைக்க வேண்டிய அவசியமுள்ளதா?
24/07/2025 Duración: 09minUK-வில் தற்போது வாக்களிக்க தகுதியான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைக்கும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. UK போன்று இளைய தலைமுறையின் வாக்கு உரிமையை குறைக்க ஆஸ்திரேலியா தயங்குவது ஏன்? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
NSW போக்குவரத்துத் துறையில் சுமார் 950 பணியிடங்கள் நீக்கம்
24/07/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Fear, vigilance and polarisation: How antisemitism is impacting Jewish Australians - SBS Examines : ஆஸ்திரேலியாவில் நிலவும் யூத விரோதம் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது?
23/07/2025 Duración: 07minMany in Australia’s Jewish community say political polarisation is fuelling a new wave of antisemitism. How are Jews responding in the face of high-profile incidents of hate? - 'வெறுப்பை புரிந்து கொள்வது' என்ற இந்த தொடரில், இன்றைய ஆஸ்திரேலியாவில் யூத விரோதத்தின் தாக்கத்தை நாம் ஆராய்கிறோம்.
-
தீர்வுகள் ஏதுமின்றி தொடரும் காணமலாக்கப்பட்டோர் பிரச்சினை
23/07/2025 Duración: 09minஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் யுத்த காலப்பகுதியில் அதற்கு பின்னரும் வலிந்துகாணாமலாக்கப்படடோர் விவகாரத்திற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் வடக்கு - கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களுடன் உரையாடுகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
-
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?
23/07/2025 Duración: 02minவிசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செம்மணியில் மீண்டும் மனித புதை குழிகள்: நியாயம் கேட்கும் குரல்கள்
23/07/2025 Duración: 16minவட இலங்கையின் அமைதியான கிராமமான செம்மணி, சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளால் மீண்டும் சர்வதேச ஊடகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1990களின் இறுதியில் இவ்விடத்தில் முதல் முறையாக கிடைத்த புதை குழிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின் அடக்கு முறைகளை உலகுக்கு வெளிச்சமிட்டிருந்தன – கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வரலாற்றின் இருண்ட கட்டங்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செம்மணி மீண்டும் கவனத்துக்கு வருகிறது. இம்முறை, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கட்டுமானத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 65ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பச்சிளம் குழந்தைகளுக்குரியவை – பாடசாலைப் பைகள், பொம்மைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், பல வருடங்களாகப் பதில்கள் இல்லாமல் காத்திருக்கின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்காகக் கு
-
கன்பராவில் பழமையும் புதுமையும் ஒன்றிணையும் 48-வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!
23/07/2025 Duración: 07minலேபர்க் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் 48வது நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதில் சுமார் 40 அரசியல்வாதிகள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயதான தொழிலாளர்கள் - ஆய்வு முடிவு
23/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.