Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
லேபரின் சோலார் பேட்டரி கொள்கையும், பிற கட்சிகளின் எரிசக்தி கொள்கையும்
10/04/2025 Duración: 07minலேபர் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வீடுகளில் சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரிகளை ஒருவர் வாங்கும்போது அரசு 30% மானியம் வழங்கும் என்று லேபர் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் எரிசக்தி விலை குறைப்பில் லிபரல்-நேஷனல் எனும் Coalitionயின் பார்வை, கிரீன்ஸ் கட்சியின் பார்வை என்ற தகவல்களோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சி.
-
மறைந்தார் குமரி அனந்தன்: 2011 ஆண்டில் SBS தமிழில் படைத்த இலக்கிய விருந்து!
10/04/2025 Duración: 13minகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்; தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டவர். இந்திய நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசி சாதனை படைத்தவர் குமரி அனந்தன் அவர்கள். அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2011 ஆம் ஆண்டு இலக்கிய விருந்து படைக்கும் நேர்முகம் ஒன்றை தொலைபேசி வழி வழங்கியிருந்தார். அந்த நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவில் புறா வளர்த்து, (புறா) பறக்கும் போட்டியில் வெற்றிபெறும் தமிழர்
10/04/2025 Duración: 12minவீடுகளில் பலர் நாய் பூனை மீன் போன்றவற்றை வளர்ப்பதை நாம் அறிவோம்... ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Rockhampton என்ற இடத்தில் வசிக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் இளைஞர், புறா வளர்க்கிறார். அது மட்டுமன்றி அந்தப் புறாக்கள் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயிற்சியும் கொடுக்கிறார். புறா வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் 2021ஆம் ஆண்டு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
குழந்தைப் பராமரிப்பு மையங்களில் முறைக்கேடுகள் : விசாரணை தேவை - கிரீன்ஸ்
10/04/2025 Duración: 08minChild care குழந்தைப் பராமரிப்புத் துறையில் நிலவும் பிரச்சனைகளை சமீபத்திய புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியதை தொடர்ந்து குழந்தைப் பராமரிப்புத் துறை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணை தேவை என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Tallulah Brassil ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
நாடுகளுக்கு வரிவிதிப்பிலிருந்து 90 நாட்களுக்கு விலக்கு, ஆனால் சீனாவுக்கு வரி அதிகாரிப்பு - Trump
10/04/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: பிரதமர் Anthony Albanese
09/04/2025 Duración: 05min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் பிரதமர் Anthony Albanese பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
09/04/2025 Duración: 08minதமிழக ஆளுநர் தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை; மத்திய பிரதேசத்தில் பாதிரியர்கள் மீது தாக்குதல்; தொடரும் வக்பு வாரிய மசோதா விவாதம், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விவாதம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பாட வருகிறார் தேவக்கோட்டை அபிராமி!
09/04/2025 Duración: 06minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் தேவக்கோட்டை அபிராமி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Coalition ஆட்சியில் சர்வதேச மாணவர் எண்ணிக்கை 80 ஆயிரத்தால் குறைக்கப்படும்- Dutton அறிவிப்பு
09/04/2025 Duración: 07minதாம் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தால் குறைக்கப்படும் என Coalition- எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
லேபர், லிபரல் கட்சி தலைவர்கள் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்!
09/04/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
தாயகம் சென்றபோது கொலைசெய்யப்பட்ட குயின்ஸ்லாந்துப் பெண்- பிந்திய தகவல்கள்
08/04/2025 Duración: 02minகுயின்ஸ்லாந்து பெண் ஒருவர் பங்களாதேஷில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி குறித்த பிந்திய விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தேர்தல் போட்டியில் லேபர் கட்சி முன்னிலை : புதிய கருத்துக்கணிப்பு முடிவு
08/04/2025 Duración: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் Roy Morgan ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவில் ஆளும் லேபர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மனநல சேவைகளுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஒதுக்குவதாக அரசு உறுதியளித்தது
08/04/2025 Duración: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 08 ஏப்ரல் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: House of Representatives
07/04/2025 Duración: 10minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான House of Representatives எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்தல் நடைபெறும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபை குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
'என்னை நாடு கடத்த வேண்டாம்' - ஈழத்தமிழ் அகதி பாஸ்கரன் குமாரசாமி
07/04/2025 Duración: 15minஇந்தியாவிற்குப் புகலிடம் தேடி 2004 ஆம் ஆண்டு சென்ற இலங்கைத் தமிழ் அகதியான பாஸ்கரன் குமாரசாமி, கடந்த 21 ஆண்டுகள் இந்திய மண்ணில் கழித்துள்ளார். தொடர்ச்சியான முரண்பாடான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் காரணமாக அவரது அகதி நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அவரது எதிர்காலம் ஊசலாட்டத்தில் உள்ளது.
-
சிட்னியில் சித்திரைப் புத்தாண்டு விழா!
07/04/2025 Duración: 13minசிட்னி தமிழ் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் “சித்திரைப் புத்தாண்டு விழா” ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிட்னியின் Merrylands நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடுகின்றனர்: பாலா விக்னேஸ்வரன் (தாயகம் வானொலி) & சிவா சிவராஜ் (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்குகின்றன !
07/04/2025 Duración: 10minநாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
07/04/2025 Duración: 12minஇந்தியாவில் கடும் எதிர்ப்பு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்; தமிழகத்தில் நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலத்திற்குப் பதிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் திறப்பு; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி; பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? - இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வரும் எனும் கொள்கையை கைவிடுகிறோம் - Peter Dutton
07/04/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் – விரிவான தகவல்
06/04/2025 Duración: 06minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக, இந்திய உதவியில் அமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.