Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:14:02
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Understanding Indigenous knowledge of weather and seasons - பூர்வீகக் குடிமக்களின் வானிலை மற்றும் பருவங்கள் பற்றிய அறிவு

    09/12/2024 Duración: 09min

    You’re probably familiar with the four seasons—Summer, Autumn, Winter, and Spring—but did you know that First Nations people have long recognised many more? Depending on the location, some Indigenous groups observe up to six distinct seasons each year. - கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம் மற்றும் வசந்த காலம் ஆகிய நான்கு பருவங்களை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் பூர்வீகக்குடிமக்கள் இன்னும் சில பருவங்களை நீண்ட காலமாக அங்கீகரித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பிடத்தைப் பொறுத்து, சில பூர்வீகக்குடி குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆறு வெவ்வேறு பருவங்களைக் கடைப்பிடிக்கின்றன.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    09/12/2024 Duración: 09min

    மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்ற போதும் அமைச்சரவை விரிவாக்கத்தில் குழப்பங்கள், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழு மற்றும் திமுக கூட்டணியை அதிரவைத்த தவெக தலைவர் நடிகர் விஜயின் பேச்சு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • உலகின் பெரும் பணக்காரியொருவர் ஏன் மரணதண்டனையை எதிர்கொள்கிறார்?

    09/12/2024 Duración: 08min

    பல பில்லியன் டாலர்களில் சொத்துவைத்திருக்கும் வியட்னாமைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பெண்மணி Truong My Lanக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பின்னணியை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • Eyewitness to the War - Dr. Varadarajah - முள்ளிவாய்க்கால் உண்மையின் சாட்சியம் வைத்தியர் வரதராஜா

    09/12/2024 Duración: 14min

    Dr. Varadarajah, a witness to the Sri Lankan war, is currently visiting Australia. His biography, chronicling his experiences, has been published as a book. During his visit to Sydney for the book launch, we had the opportunity to meet and speak with him at the SBS studio. - இலங்கையில் நடந்த போரில் நேரடி சாட்சியமாக இருந்த வைத்தியர் வரதராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிட்னியில் அந்த நூலை வெளியிட்டு வைக்க அவர் வந்திருந்த வேளை, SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடினோம்.

  • சிரியா நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி!

    09/12/2024 Duración: 06min

    அதிர்ச்சியூட்டும் வகையில், சிரியா நாட்டில் நடந்து வந்த குடும்பத்தின் 50 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்துள்ளது. மின்னல் வேகத்தில் நடந்த கிளர்ச்சித் தாக்குதலைத் தொடர்ந்து, அதிபர் பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

  • நாட்டில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு

    09/12/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • மேற்கு சிட்னியில் SBS தனது மையத்தை திறக்கிறது

    08/12/2024 Duración: 04min

    மேற்கு சிட்னியில் SBS தனது மையத்தை திறக்கிறது - இது குறித்த தகவலை முன்வைப்பவர் – றைசெல்

  • ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

    06/12/2024 Duración: 05min

    இந்த வாரம் (1–7 December 2024) ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 7 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலியாவின் அதிக சம்பளம் பெறும் CEO பட்டியலில் முதலிடம் வகிக்கும் இலங்கைப்பெண்!

    06/12/2024 Duración: 03min

    The Australian Financial Review வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி ஆஸ்திரேலியாவின் அதிக ஊதியம் பெறும் ceo- தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் இலங்கைப் பின்னணிகொண்ட Shemara Wikramanayake. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?

    06/12/2024 Duración: 08min

    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • “அரசர்களாகவும், புலவர்களாகவும் இவர்கள் இருந்ததால் பல்நோக்கு சிந்தனை மேலோங்கி நிற்கிறது”

    06/12/2024 Duración: 12min

    முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர். சங்க இலக்கியம், கோயிற்கலை, தமிழ்க்கணினி – இணையம், சமயம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்திய குடியரசுத்தலைவரின் ”செம்மொழித்தமிழ் இளம் அறிஞர்” விருது (2010-2011), தமிழக அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது(2018) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் – றைசெல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    06/12/2024 Duración: 08min

    இலங்கையில் மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் ஜே.வி.பியின் கருத்து; நாட்டின் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்; இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களை அதிபர் சந்தித்து பேசியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • சர்வதேச மன்னிப்புச் சபையின் இனப்படுகொலை குற்றச்சாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுத்தன

    06/12/2024 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை

  • தென் கொரியாவில் என்ன நடக்கிறது?

    05/12/2024 Duración: 07min

    தென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஏன் அதிபர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவரை பதவி நீக்கம் செய்ய ஏன் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன எனும் தென்கொரிய அரசியல் தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.

  • மெல்பனில் 4 இடங்களில் வெள்ளை வானில் சிறுவர்களைக் கடத்த முயற்சி!

    05/12/2024 Duración: 02min

    மெல்பனில் கடந்த 3 வாரங்களில் 4 சிறுவர் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் பள்ளிகளைச் சுற்றி ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • “விடுதலைப் போராட்டம் பூப்பறிக்கும் வேலையல்ல” - ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை

    05/12/2024 Duración: 14min

    காலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 3, 1948) அவர் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்தார். இந்த வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் – பாகம் 2.

  • நீரில் மூழ்கி இறக்கின்றவர்களில் ஏன் குடியேற்றவாசிகள் மிக அதிகம்?

    05/12/2024 Duración: 05min

    நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களும், குடியேற்றவாசிகளும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Tom Stayner. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.

  • இலங்கையில் பெண்களுக்குப் பேருதவி வழங்கும் ஐயை குழு

    05/12/2024 Duración: 11min

    உலக அளவில் திறன்சார்ந்த பெண்கள் குழுமமாக இயங்கிவருகிறது ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றம். அதன் இலங்கைக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் வலன்டீனா இளங்கோவன் அவர்களை தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவில் யார் எளிதாக குடியேற இனி விசா வழங்கப்படும்?

    05/12/2024 Duración: 05min

    நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் 456 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படியான தொழில் பின்னணி கொண்ட திறமையானவர்களுக்கு அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் புலம்பெயர்ந்து வர அல்லது முன்னுரிமை அடிப்படையில் விரைவில் விசா வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எந்த தொழில்பின்னணி கொண்டவர்களுக்கு அரசு முன்னுரிமை தரப்போகிறது என்பது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர் றைசெல்.

  • “நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது, ஆனால் பலவீனமாக உள்ளது”

    05/12/2024 Duración: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 5 டிசம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

página 4 de 25