Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
கல்வி குறித்து கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன?
16/04/2025 Duración: 08minகுழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவை குறித்து நாட்டின் முக்கிய கட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைகள் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
எந்த மாநில மக்கள் பொதுப்போக்குவரத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் அதிகம் ஏமாற்றுகின்றனர்?
16/04/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் கட்டணம் செலுத்தாமல் பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தேர்தல் 2025: தமிழ் வாக்காளர்கள் கூறுவது என்ன?
16/04/2025 Duración: 12minமே 3 -ஆம் தேதி பெடரல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாட்டின் முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சிட்னி, மெல்பன், பிரிஸ்பன், அடிலெய்டு மற்றும் டார்வின் நகரங்களில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் சிலரிடம் எதிர்வரும் தேர்தலில் முக்கியமாக அவர்கள் பார்க்கும் விடயங்கள் எவை என்று கேட்டோம். வாழ்க்கைச் செலவு முதல் பூர்வீகக்குடியின மக்களுக்கான நலத் திட்டம் வரை தங்கள் எதிர்பார்ப்புகளை கூறினார்கள். அவர்களின் கருத்துகளின் தொகுப்பை அடுத்ததாக தொகுத்து வழங்குகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
16/04/2025 Duración: 07minதமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம்; விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்; தமிழகத்தில் நடந்த தாதுமணல் முறைகேடு - சிபிஐ சோதனை; சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை குறிவைத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
How to recover from floods and storms in Australia - ஆஸ்திரேலியாவில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வது எப்படி?
16/04/2025 Duración: 10minAustralia is experiencing more frequent and intense floods and storms. Once the winds calm and the water recedes, how do you return home safely? Experts speak on the essential steps to take after a disaster. - ஆஸ்திரேலியாவில் அடிக்கடி புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் பின்னணியில், வெள்ளம் வடிந்தவுடன் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வீடு திரும்புவது, மற்றும் சுத்தம் செய்வது என்ற தகவல்கள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில் இதனைத் தயாரித்தவர் Audrey Bourget: தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் எவை?
16/04/2025 Duración: 07minஆஸ்திரேலியாவில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களைக் குறிவைத்து லேபர் கட்சியும் Coalition- எதிர்கட்சி கூட்டணியும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ரஷ்ய போர் விமானங்களுக்கு இந்தோனேசியாவில் தளம்?
15/04/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
கோழியை முதலைகளுக்கு இரையாக்கிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை மறுப்பு
15/04/2025 Duración: 02minஆஸ்திரேலிய வனவலங்குப் பூங்காவில் கோழியொன்றை முதலைகளுக்கு இரையாக்கிய குற்றத்திற்காக முதியவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை மறுக்கப்பட்ட செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
15/04/2025 Duración: 02minஈஸ்டர் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விண்வெளிக்கு ஆண்களின்றி தனியாக சென்று சாதனை படைத்த பெண்கள் குழு!
15/04/2025 Duración: 02minBlue Origin விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள விண்கலத்தில் சுற்றுலா சென்ற ஆறு பெண்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஈரான் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் - Trump
15/04/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா?
14/04/2025 Duración: 09minWith an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா?
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன்
14/04/2025 Duración: 07min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
சிட்னி மக்களை, சித்திரைத் திருவிழாவில் மயக்க வருகிறார் புரட்சிமணி !
14/04/2025 Duración: 13minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கிராமிய இசைக்கலைஞர் புரட்சிமணி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
தேர்தல் பிரச்சாரங்கள் நடுப் புள்ளியை எட்டியது!
14/04/2025 Duración: 08minதேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் நாள் வரையான காலத்தின் நடுப்புள்ளியில் நாம் இருக்கிறோம். கடந்த இரண்டரை வாரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: செனட் (Senate)
14/04/2025 Duración: 12minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான செனட் அவையிலுள்ள செனட்டர்கள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றனர் என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
14/04/2025 Duración: 09minஇந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம்; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் உறுதியானது அதிமுக- பாஜக கூட்டணி; சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு; பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் - கடும் உட்கட்சி மோதலில் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கக்கோரி சிட்னியில் பேரணி!
14/04/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
Beyond books: How libraries build and support communities in Australia - ஆஸ்திரேலியாவிலுள்ள நூலகங்கள் வழங்கும் சேவைகள் எவை?
13/04/2025 Duración: 10minAustralian public libraries are special places. Yes, they let you borrow books for free, but they also offer a wealth of programs and services, also free, and welcome everyone, from tiny babies to older citizens. - ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகங்கள் வழங்கும் பரந்த அளவிலான சேவைகள் தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
12/04/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 ஏப்ரல் – 12 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.