Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 105:19:16
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • 100 மில்லியன் டொலர்கள் Powerball பரிசுத் தொகைக்கு சொந்தக்காரர் நீங்களா?

    14/06/2025 Duración: 02min

    இந்த ஆண்டின் மிகப்பெரிய Powerball சீட்டிழுப்பில் $100 மில்லியன் வென்ற ஆஸ்திரேலியர் யாரென்பது இன்னமும் தெரியவரவில்லை.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    14/06/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (08 –14 ஜூன் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 14 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையின் கைதுமுயற்சியின்போது உணர்விழந்த இந்தியர் மரணம்!

    13/06/2025 Duración: 02min

    தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்டில் காவல்துறையினரின் கைது முயற்சியின்போது சுயநினைவை இழந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழனிடம் தோற்றுப்போன துடுப்பாட்டத் தலைவன் Don Bradman

    13/06/2025 Duración: 04min

    காலத்துளி நிகழ்ச்சியில் 1948ம் ஆண்டு, ஜூன் மாதம் 12ம் நாள், Trent Bridge இல் நடைபெற்ற Test Cricket போட்டியில் Donald Bradman, 138 ஓட்டங்களைப் பெற்றது குறித்தும், துடுப்பாட்டத் தலைவன் Don Bradman தமிழனிடம் தோற்றுப்போனது எப்படி என்ற வெளியே தெரியாத தரவுகளுடன் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • Air India விமான விபத்து: 265 பேர் பலி, இதுவரை வெளியான தகவல்கள்!

    13/06/2025 Duración: 06min

    இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற Air India விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 265 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து இதுவரை வெளியான தகவல்களின் தொகுப்பை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    13/06/2025 Duración: 08min

    இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்கும் இலங்கை- ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி; மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள யாழ். திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Air India விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்

    13/06/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    12/06/2025 Duración: 09min

    ஈராக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற அறிவுறுத்தல்; முடிவுக்கு வந்த அமெரிக்கா- சீனா வர்த்தக மோதல்; தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பதற்றம்; உலகெங்கும் 123 மில்லியன் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர்; இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கோர விபத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • அதிர்ச்சித் தகவல் - பிரபல சன்ஸ்கிரீன்கள் கூறும் SPF அளவு தவறானவை!

    12/06/2025 Duración: 06min

    நாட்டில் விற்பனையில் உள்ள பிரபலமான சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் குறித்து முக்கியமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோதனைக்குட்பட்ட 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகளில் மொத்தம் நான்கு தயாரிப்புகள் மட்டுமே, அவை குறிப்பிட்டிருந்த Sun Protection Factor (SPF) மதிப்பினை உண்மையில் பூர்த்தி செய்துள்ளன. இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • 242 பேருடன் லண்டன் சென்றுகொண்டிருந்த Air India விமானம் விபத்துக்குள்ளானது!

    12/06/2025 Duración: 02min

    ஜுன் 12 வியாழக்கிழமை இன்று இந்தியாவிலிருந்து லண்டன் சென்றுகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழ் தாத்தாவின் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்

    12/06/2025 Duración: 06min

    தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறிஞருமான உ. வே. சாமிநாதர் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. படைக்கிறார் றைசெல்.

  • ஆஸ்திரேலியா அறிவோம்: Barossa Valleyயின் வரலாறும், சிறப்பும்!

    12/06/2025 Duración: 09min

    தெற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் அடிலெய்டிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் South Australia’s Wine Haven என்று அழைக்கப்படும் Barossa Valley-யின் வரலாறு, அங்கு செல்லும் சுற்றுலாவாசிகள் என்னவெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.

  • “பத்து பில்லியன் பேருக்குப் புரதச்சத்து எங்கிருந்து வரப் போகிறது?”

    12/06/2025 Duración: 13min

    முனைவர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, பல்வேறு வகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியது. கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, தாவரங்களிலிருந்து புரதப் பொருட்களைத் தேட வேண்டியதன் அவசியம் குறித்தும், தாவரங்களிலிருந்து புரதத்தைப் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சியில் அவர் கண்டுள்ள வெற்றி குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

  • போராட்டங்களை அடக்க, அமெரிக்க நகரங்களில் சிறப்பு கடற்படை வீரர்கள்

    12/06/2025 Duración: 09min

    அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தும் செயற்பாட்டை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க Marines எனப்படும் சிறப்பு கடற்படை வீரர்கள் Los Angeles நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் இளம் தமிழ் பெண் விஞ்ஞானி!

    12/06/2025 Duración: 12min

    டாக்டர் தேவிகா காமத் Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி. இவர் வானியற்பியல் துறையில் தான் கண்ட கனவு மற்றும் அது மெய்பட முயற்சித்து உழைத்த தனது கதையை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • Monash IVF செயற்கை கருத்தரிப்பு மையத்தின் தவறுக்காக CEO பதவி விலகினார்

    12/06/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • SBS 50 : எங்கள் பெற்றோரும் SBS வானொலியும்!

    11/06/2025 Duración: 12min

    SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், SBS தமிழ் ஒலிபரப்பினை நீண்டகாலமாக கேட்டு மகிழ்ந்த சில நேயர்களின் பிள்ளைகள் அவர்களின் பெற்றோரின் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

  • SBS 50 ஆண்டுகள்: சிறப்பும் சவால்களும்

    11/06/2025 Duración: 11min

    SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பாளர்களாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேல் கடமையாற்றி வருபவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    11/06/2025 Duración: 07min

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம்; கீழடி தொல்லியல் ஆய்வு சர்ச்சை; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; தீவிரமடையும் மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • குழந்தை பெறும் பெற்றோரின் விடுப்பு தொடர்பான சட்டத்தில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது

    11/06/2025 Duración: 06min

    Paid parental leave ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பு எடுத்துள்ள பெற்றோரின் குழந்தை பிறந்து பிறகு இறந்து போனால் அவரின் paid parental leave ரத்து செய்யப்படுகிறது. இதனை மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்ய போவதாக லேபர் அரசு உறுதியளித்துள்ளது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

página 13 de 42