Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
ஆஸ்திரேலியர்கள் எந்த brand-ஐ அதிகம் நம்புகின்றனர்? எதை நம்பவில்லை?
04/12/2024 Duración: 02minஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்?
04/12/2024 Duración: 02minஆஸ்திரேலியாவில் மிகவும் மகிழ்ச்சியான குடியிருப்பாளர்கள் யார் என்பது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட கிரேட் சதர்ன் வங்கி தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் தமிழில் உயரம் தொடும் 15 மாணவர்கள்!
04/12/2024 Duración: 16minஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக எடுத்து, படித்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், இந்த ஆண்டு 15 மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து கடந்த ஞாயிறு (1 டிசம்பர், 2024) பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பே இந்த நிகழ்ச்சி. தொகுத்தவர்: றைசெல்.
-
விஸ்வகர்மா திட்டம் & வங்கதேச சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்: செய்திகளின் பின்னணி என்ன?
04/12/2024 Duración: 07minவிஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் எனும் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
நாட்டில் வட்டி விகிதத்தைக் குறைப்பதை அல்லது கூட்டுவதை RBA எப்படி முடிவு செய்கிறது
04/12/2024 Duración: 07minவட்டி விகிதத்தை உயர்த்தலாமா, நிறுத்தி வைப்பதா அல்லது குறைக்கலாமா என்று ஒரு வருடத்தில் எட்டு முறை Reserve Bank உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள். அந்த முடிவு எவ்வாறு எடுக்கப் படுகிறது என்பதன் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
'பாலி நைன்' குழுவின் மீதமுள்ளோர் விரைவில் நாடு திரும்ப வாய்ப்பு
03/12/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/12/2024) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய அஞ்சல்தலை விலை உயர்கிறது!
03/12/2024 Duración: 02minஆஸ்திரேலியாவில் கடிதங்கள் மற்றும் முத்திரை விலைகள் அடுத்த ஆண்டு உயரும் என்று ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியாவில் ஆஸ்திரேலிய பணத்தை போலியாக அச்சடித்த ஆஸ்திரேலியர் கைது!
03/12/2024 Duración: 02minஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மவுலிக் படேல் என்பவர், குஜராத்தில் ஆஸ்திரேலிய பணத்தாளை அச்சடித்து விற்பனை செய்ய முயற்சித்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக “இந்தியா டுடே” பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
03/12/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
“மலையகத் தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்”
02/12/2024 Duración: 08minஇலங்கையில் இடதுசாரி அரசியலை முன்னெடுப்பவர்களில் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். மலையகத் தமிழர் பின்னணி சார்ந்த அவர், கல்வியியலாளர், ஓய்வு நிலை பீடாதிபதி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், வருகை தரும் விரிவுரையாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் என்று பல தகமைகளைக் கொண்டவர். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகம் – பாகம் 2.
-
“நாம் எடுத்துவர இருக்கும் பல படைப்புகளில் இது முதலாவது" - ‘ஓடு ஓடு' தயாரிப்பாளர்
02/12/2024 Duración: 22minசமூக புரொடக்ஷன்ஸ் சமீபத்தில் “ஓடு ஓடு” என்ற தலைப்பில் தமது முதல் காணொலியை வெளியிட்டது. அதன் தயாரிப்பாளர் செந்தூரன் தேவராஜா, இயக்குனர் துளசி ராமகிருஷ்ணசாமி மற்றும் பாடகர்கள் றோஹான் மற்றும் சத்தியன் இளங்கோ ஆகியோருடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
-
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம், பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம்
02/12/2024 Duración: 08minஇந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
முப்பதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் ஒரே இரவில் மாற்றப்பட்டன. அவை எவை என்று தெரியுமா?
02/12/2024 Duración: 06minநாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படாத பல சட்ட முன்வரைவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற Labor கட்சி அரசின் விருப்பத்தில் பல சட்ட முன் வரைவுகள் செனட் சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டன.
-
மெல்பனில் 'சிலப்பதிகாரம்' அரங்கப் படைப்பு!
02/12/2024 Duración: 12minபாரதி பள்ளியின் ஏற்பாட்டில் மெல்பனில் 'சிலப்பதிகாரம்' அரங்கப் படைப்பு டிசம்பர் 6 & 8ம் திகதிகளில் Drum Theatre, Dandenong-இல் மேடையேற்றப்படுகின்றது. இது தொடர்பில் இந்த அரங்கப் படைப்பை எழுதியவரான திரு மாவை நித்தியானந்தன் மற்றும் இதனை நெறியாள்கை செய்பவரான திருமதி பகீரதி பார்த்தீபன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“இடதுசாரி சிந்தனை தோல்வி என்கிறவர்கள், முதலாளித்துவம் அனைத்துக்கும் தீர்வு தரும் என்பார்களா?”
02/12/2024 Duración: 20minஇலங்கையில் இடதுசாரி அரசியலை முன்னெடுப்பவர்களில் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். மலையகத் தமிழர் பின்னணி சார்ந்த அவர், கல்வியியலாளர், ஓய்வு நிலை பீடாதிபதி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், வருகை தரும் விரிவுரையாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் என்று பல தகமைகளைக் கொண்டவர். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகம் – பாகம் 1.
-
Understanding how pharmacies operate in Australia - ஆஸ்திரேலியாவில் மருந்தகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
02/12/2024 Duración: 11minIn Australia pharmacists dispense prescription medications and provide healthcare advice, educating the community on the use of medicines and disease prevention. - ஆஸ்திரேலியாவில், மருந்தாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குகிறார்கள், பாதுகாப்பான மருந்து பயன்பாடு மற்றும் நோய் தடுப்பு குறித்து சமூகத்திற்கு கல்வி புகட்டுகின்றனர். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்பட்சத்தில், உங்கள் மருத்துவர் மருந்துகளை பரிந்துரைத்தால், அடுத்தபடியாக நீங்கள் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் செல்வீர்கள். இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் மருந்தக கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் மருந்தகத்திற்குச் செல்லும்போது என்னென்னவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் பார்ப்போம்.
-
சர்வதேச நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய சாட்சி: காலநிலை நடவடிக்கையில் ஒரு மைல்கல்
01/12/2024 Duración: 03minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 02 டிசம்பர் 2024 திங்கட்கிழமை.
-
"தொழில் நுட்பத்தின் அசுர வேகத்தில் தமிழ் மொழி சாகாது"
01/12/2024 Duración: 14minதமிழின் பழம்பெருமைபேசியே காலம் தள்ளாமல் இன்றைய நவீன காலத்திற்கு தமிழை முன்னெடுத்துச் செல்லும் நவீன சிந்தனைகொண்ட இளம் தமிழறிஞர் முனைவர் S சிதம்பரம் அவர்கள்.
-
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
29/11/2024 Duración: 04minஇந்த வாரம் (24 –30 November 2024) ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 30 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
கோவிட் விதிமீறலுக்காக அறவிடப்பட்ட மில்லியன் கணக்கான அபராதத்தொகை திரும்ப வழங்கப்படுகிறது
29/11/2024 Duración: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக மில்லியன் கணக்கான டொலர்கள் அபராதமாக அறவிடப்பட்டிருந்த நிலையில் அவை மீளளிக்கப்படுகின்றன.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.