Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் போலி சான்றிதழ்களை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு
15/07/2025 Duración: 02minகுழந்தை பராமரிப்பு மற்றும் மனநலம் முதல் பொறியியல் வரை போலி டிப்ளோமாக்களை வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித்தகைமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'இப்போது உள்ள கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு' - B.சரோஜாதேவி
15/07/2025 Duración: 10min'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் நிறைவு பாகம்.
-
How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை?
15/07/2025 Duración: 10minIn Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal drinking age, where you can buy or consume alcohol, and how these rules vary across states and territories. - ஆஸ்திரேலியாவில் மதுப்பாவனை மற்றும் அதை வடிவமைக்கும் விதிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி
15/07/2025 Duración: 11min'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்
-
காலநிலை அச்சுறுத்தல்: பூர்வீகக்குடி மக்களுக்கு அரசு ஆவன செய்ததா என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்
15/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
‘நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை’ - B.சரோஜாதேவி
14/07/2025 Duración: 14min'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் முதல் பாகம்.
-
தெற்கு ஆஸ்திரேலியா வாகன விபத்தில் சர்வதேச மாணவர் பலி!
14/07/2025 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டில் அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் யார்?
14/07/2025 Duración: 02minஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்( ATO) வெளியிட்ட தரவுகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் Tradie Jobs எவையென்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் GSTஐ அதிகரிக்க வேண்டும்?
14/07/2025 Duración: 08min25 ஆண்டுகளுக்கு முன்னர் Goods and Services Tax, அல்லது GST என்ற பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வரி இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் நிதி நிலை கட்டமைப்பில் இருக்கும் பற்றாக்குறையைக் குறைக்க, அதன் வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஒரு வழியாக GSTஐ 10 சதவீதத்திலிருந்து உயர்த்துவது குறித்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆளும் Labor கட்சி அரசியல்வாதிகள் அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், அதை அதிகரிப்பது நல்லது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஐரோப்பா மற்றும் மெக்ஸிகோ மீது 30% இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு
14/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
14/07/2025 Duración: 09minஇந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முதல் கட்ட அறிக்கை வெளியீடு - அதிர்ச்சி தகவல்கள்; திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டம் - விஜய் அதிரடி பேச்சு; தமிழக பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது. `ப' வடிவில் மாறும் பள்ளி இருக்கைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
SBS 50: எங்கள் எண்ணத்தில் SBS ஒலிபரப்பின் பயணம்
13/07/2025 Duración: 13minSBS தமிழ் ஒலிபரப்பு வழங்கிவரும் SBS 50 எனும் கொண்டாட்டத் தொடரின் நிறைவு நிகழ்ச்சி. SBS நிறுவனம் 50 ஆண்டுகளாக பல்லின, பன்மொழி ஊடகமாக வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய பன்மொழி ஊடகமாக திகழும் இவ்வேளையில் நம்முடன் பணியாற்றிய செய்தியாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள். கருத்துக்களை முன்வைப்பவர்கள்: அபிராமி, விக்ரமசிங்கம், மேகா, செல்வநாதன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
11/07/2025 Duración: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 – 12 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
11/07/2025 Duración: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 – 12 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How to start your home business in Australia - வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்க விரும்புகிறீர்களா?
11/07/2025 Duración: 10minDid you know that people offering taxi services from home need to register for Goods and Services Tax (GST)—regardless of how much they earn? Or that a fitness instructor needs local council approval to see clients at home? In this episode, we unpack the basic rules you need to know when setting up a home-based business in Australia. - உங்கள் வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விதிமுறைகள் மற்றும் முக்கிய படிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Daintree மழைக்காடு
11/07/2025 Duración: 07minஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகவும் பழமையான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ள, Daintree Rainforest அமைந்துள்ளது. இது குறித்த தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.
-
ஒரேநேரத்தில் 16 விடயங்களை கவனிக்க முடியும் என்பது தமிழ்க்கலை என்பது தெரியுமா?
11/07/2025 Duración: 14minஉங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷயங்களைக் கவனத்தில் வைத்திருக்க ஒரு கவனகரால் முடியும். இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறனை, இராம.கனக சுப்புரத்தினம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது குறித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.இராம.கனக சுப்புரத்தினம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பான நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
விமானப் பயணங்களில் பவர் பேங்குகள் குறித்து மாறியுள்ள விதிமுறைகள் யாவை?
11/07/2025 Duración: 06minதற்போது தொடங்கியுள்ள பாடசாலை விடுமுறை காலத்தில், விமானப் பயணங்களை திட்டமிடும் ஆஸ்திரேலியர்கள், தங்களுடன் எடுத்துச் செல்லும் லித்தியம் பேட்டரிகள் கொண்ட power bank உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்வதில் உள்ள விதிமுறைகள் மற்றும் அபாயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் இதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆசியான் நாடுகளுடனான வர்த்தக உறவை அதிகரிக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது
11/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
11/07/2025 Duración: 08minஇலங்கையின் புதிய அரசாங்கத்திலும் தமிழர் பகுதியில் தொடரும் சிங்கள குடியேற்றம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களின் குற்றச்சாட்டு; செம்மணியில் தொடரும் அகழ்வில் 60 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுப்பு; செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.