Sbs Tamil - Sbs

மதுபானத்திற்கு விருது பெற்ற தமிழர் !!

Informações:

Sinopsis

தேநீர் அருந்தியிருப்பீர்கள்.... வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்று மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை புரிந்துள்ளார் இரமணன் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் பானத்தைத் தயாரிக்கும் கருத்துருவாக்கம் எங்கே ஏற்பட்டது. அதைத் தயாரிப்பதில் ஏதாவது சவால்களை எதிர்கொண்டாரா, இதற்கான ஆதரவு எப்படியிருக்கிறது போன்ற குலசேகரம் சஞ்சயனின் பல்வேறு கேள்விகளுக்கு இரமணன் 2016ஆம் ஆண்டில் பதில் தந்திருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.