Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 105:19:16
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • மருந்துகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தால் அது ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?

    10/07/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்?

    09/07/2025 Duración: 12min

    புரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • NSW அரசு 250 டொலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது!

    09/07/2025 Duración: 02min

    வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டொலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தை NSW அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • DonateLife வாரம் 2025: நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் கதை

    09/07/2025 Duración: 11min

    உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ள வாரம், DonateLife வாரம் ஆகும். இந்த ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை DonateLife வாரம் நடைபெறுகிறது. இந்த முக்கியமான வாரத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநிலத்தின் Robinvale என்ற இடத்தில் வாழும் பீஜே குடும்பத்தின் எழுச்சியூட்டும் பயணத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

  • NAIDOC: பூர்வீகக்குடி மக்களின் சிறப்பைக் கொண்டாடும் வாரம்!

    09/07/2025 Duración: 07min

    NAIDOC வாரம் (National Aboriginal and Islanders Day Observance Committee வாரம்) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடியின மக்களின் பன்முகத்தன்மையும், அவர்களது கலை, கலாச்சாரம், சமூக பங்களிப்புகளும் கொண்டாடப்படும் முக்கியமான வாரமாகும். இந்த ஆண்டு NAIDOC வாரம் ஜூலை 6 முதல் 13ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • காவல் துறையில் நிறவெறி உள்ளது என ஒப்புக்கொண்ட NT காவல்துறை தலைவர்!

    09/07/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    09/07/2025 Duración: 07min

    கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து; ரிதன்யா தற்கொலை விவகாரம்; பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவின் விளக்கம்; சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறும் டிரம்ப்; மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • NSW ரயில் பயணிகளுக்கு இரு நாட்கள் இலவச பயணச்சலுகை!

    08/07/2025 Duración: 02min

    நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் ரயில் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு மட்டுமான இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

    08/07/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • $1.5 மில்லியன் செலவில் காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டதை அரசு நியாயப்படுத்தியது

    08/07/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson குற்றவாளி என தீர்ப்பு

    07/07/2025 Duración: 02min

    விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கிறார்கள்'

    07/07/2025 Duración: 13min

    பத்தாவது உலக தொல் பொருள் மாநாடு (WAC-10), ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டார்வின் நகரில் நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200ற்கும் மேற்பட்ட தொல் பொருள் ஆய்வாளர்கள் நேரடியாகவும், மற்றும் சுமார் 3,000 பேர் இணைய வழியாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குனர் இராமலிங்கம் சிவானந்தம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • குழந்தை பராமரிப்பு மையங்கள்: பாதுகாப்பு முக்கியமா? இலாபம் முக்கியமா?

    07/07/2025 Duración: 07min

    மெல்பனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள Point Cook இலுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இரண்டு வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் மீது, 26 வயதான Joshua Dale Brown என்பவர் 70ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்புத் துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி அறிமுகப்படுத்த மாநில மற்றும் ஃபெடரல் அமைச்சர்கள் முனைந்து வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • நாட்டின் வட்டி வீதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்படுமா?

    07/07/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 07/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    07/07/2025 Duración: 09min

    மத்திய பாஜக அரசு இந்தியை திணிப்பதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு - பணிந்தது மத்திய பாஜக அரசு; தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாக தான் இருக்கும் என்று தவெக விஜய் அறிவிப்பு, தந்தை மகன் உச்சகட்ட மோதல் - உடைந்து சிதறும் பாட்டாளி மக்கள் கட்சி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    05/07/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (29 ஜூன்– 05 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி.

  • திபெத்தின் ‘தலாய் லாமா” அமைப்பின் பின்னணியும் இன்றைய சிக்கலும்!

    04/07/2025 Duración: 11min

    திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய்லாமா, ‘தலாய் லாமா அமைப்பு தொடரும்’ என்று அறிவித்திருக்கிறார். இதன் முக்கியத்துவம் தொடர்பிலும் திபெத்தின் ‘தலாய் லாமா' அமைப்பின் பின்னணி தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசல்

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    04/07/2025 Duración: 08min

    காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முன்மொழிவும் ஹமாசின் பதிலும்; இந்தோனேசியாவில் படகு விபத்து; மாலியில் ஜிகாதிய குழுவின் தாக்குதல்கள்; தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்; உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை கட்டுப்படுத்திய அமெரிக்கா; காங்கோ ஜனநாயக குடியரசு- ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அரியவகை கனிமங்களும் சீனாவும் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    04/07/2025 Duración: 08min

    யாழ். செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள். தொடர்ந்தும் மனித எச்சங்கள் மீட்பு; நாடாளுமன்றத்தில் எதிரொலித்த செம்மணி விவகாரம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • பாரதி பள்ளியின் நாடக விழாவும் 'பாப்பா பாரதி' காணொளி வெளியீடும்!

    04/07/2025 Duración: 07min

    பாரதி பள்ளியின் இளைய மாணவர் நாடக விழாவும் 'பாப்பா பாரதி' YouTube காணொளி வெளியீடும் மெல்பனில் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் பாரதி பள்ளியின் இயக்குனர் மற்றும் அதிபர் மாவை நித்தியானந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 8 de 42