Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 71:22:20
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு நேரம் எங்கு அதிகம் தெரியுமா?

    10/02/2025 Duración: 02min

    மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைத் தருகிறார் செல்வி.

  • How to access parental leave pay in Australia - ஆஸ்திரேலியாவில் parental leave கொடுப்பனவு பெறுவது எப்படி?

    10/02/2025 Duración: 10min

    In Australia, some parents can receive parental leave payments from the government and their employers. But not everybody is eligible. This article breaks down what’s available, who can claim, and how to access these benefits. - ஆஸ்திரேலியாவில், சில பெற்றோர்கள் அரசிடமிருந்தும், அவர்களின் முதலாளிகளிடமிருந்தும் பெற்றோர் விடுப்பு- parental leave கொடுப்பனவுகளைப் பெறலாம். ஆனால் அனைவரும் இதற்குத் தகுதியுடையவர்கள் அல்ல.இந்த விவரணத்தில், parental leave கொடுப்பனவுகள் என்னென்ன கிடைக்கின்றன, யார் தகுதியுடையவர்கள், அவற்றை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.

  • ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

    10/02/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் பல அழகிய கடற்கரைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவை எவை என்பது தெரியுமா? இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • புற்றுநோய் வந்தவர்களுக்கொரு புதிய பாலம்

    10/02/2025 Duración: 14min

    World Cancer Day – உலக புற்றுநோய் தினம், February நான்காம் நாள் அவதானிக்கப்பட்டது. புற்றுநோய் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், புற்றுநோயைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் செய்யப்படும் பணிகளைப் போற்றவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அவதானிக்கப் படுகிறது.

  • Starlink சேவை குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?

    10/02/2025 Duración: 06min

    Starlink சேவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர், Elon Musk. உலகின் மிகப் பெரிய பணக்காரர். தற்போது, அமெரிக்க அதிபர் Donald Trump இன் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர். அவரது நிறுவனமான Starlink வழங்கும் இணைய சேவையை ஆஸ்திரேலியர்கள் நம்பியிருப்பது குறித்து சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    10/02/2025 Duración: 11min

    டெல்லி தேர்தலில் பாஜக அபார வெற்றி! 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னணி, தமிழக ஆளுநர் ரவிக்கு 12 மசோதாக்களை நிறுத்தியது ஏன் என்று இந்தியா உச்சநீதிமன்றம் கடும் கண்டனம், ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக அமோக வெற்றி மற்றும் கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • 20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வென்றது ஆஸ்திரேலியா

    10/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 10/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    07/02/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 பிப்ரவரி – 08 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 08 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.

  • Are you breaching copyright when using social media? - சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதிப்புரிமையை மீறுகிறீர்களா?

    07/02/2025 Duración: 10min

    Have you ever shared someone else’s video or music on social media without their permission? Chances are you were infringing their copyright. Understanding how copyright is applied will help you avoid awkward situations and potentially serious consequences. - வேறொருவரின் வீடியோ அல்லது இசையை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்களா? நீங்கள் அவர்களின் பதிப்புரிமையை மீறியிருக்கலாம்.

  • மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்

    07/02/2025 Duración: 09min

    சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரது தனித்துவமான பாணி தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய மரபுகளை துணிச்சலாக இணைக்கிறது.

  • தீவிரவாதத்தை எதிர்க்கவும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் சிட்னி மேயர்கள் ஒன்றுபடுகிறார்கள்

    07/02/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    06/02/2025 Duración: 08min

    மிக எளிமையான முறையில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினம், வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டம்,வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை-இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • அரச வாகனத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியதால் பதவியிழந்த அமைச்சர்!

    06/02/2025 Duración: 06min

    NSW மாநிலத்தில் அரச வாகனத்தை சொந்தக் தேவைகளுக்கு பயன்படுத்தியதால் அம்மாநில போக்குவரத்துக்கு அமைச்சர் Jo Haylen கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மனநல மருத்துவ அமைப்பில் நிலவும் அழுத்தங்களினால் பாதிக்கப்படும் இளைஞர்கள்!

    06/02/2025 Duración: 05min

    மனநல சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை சமாளிக்க நாட்டில் உள்ள மனநல அமைப்பு போராடி வரும் நிலையில் இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Gabrielle Katanasho எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • "பாரதி உயிரோடு இருந்தால், தமிழ்நாட்டில் அனைத்தும் தமிழ்மயமாகியிருக்கும்."

    06/02/2025 Duración: 22min

    மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத்தாளர் இளசை மணியன் அவர்கள் மகாகவி பாரதி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

  • Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க MasterCard-இன் புதிய திட்டம்!

    06/02/2025 Duración: 06min

    Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க 2030-ஆம் ஆண்டிற்குள் கார்டுகளில் இருந்து 16 இலக்க எண்ணை அகற்றும் திட்டத்தை MasterCard அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • உணவு பழக்கங்களினால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியுமா?

    06/02/2025 Duración: 10min

    தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.

  • “தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர்

    06/02/2025 Duración: 06min

    தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வீரமாமுனிவர் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை போதிக்க தமிழகம் வந்த அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டு நிகழ்த்திய சாதனைகளும், பங்களிப்பும் அளப்பெரிது. ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றிய காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • சிட்னி பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் நன்கொடை வழங்கி சாதனை படைத்த பில்லியனர்

    06/02/2025 Duración: 02min

    அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம்பெறும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த ஏதுவாக, சிட்னி பல்கலைக்கழகத்திற்கு வரலாற்றுச் சாதனைத் தொகையான 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையை Robin Khuda என்ற பில்லியனர் வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • யூத எதிர்ப்பு நடவடிக்கைக் குற்றங்களுக்கு சிறைத்தண்டனை - பெடரல் அரசு ஒப்புதல்!

    06/02/2025 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 06/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

página 26 de 28