Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
100க்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேலிலிருந்து மீட்பு
24/06/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/06/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மேற்கு ஆஸ்திரேலியாவில் புறாவைத் துன்புறுத்திய மூவருக்கு 130,000 டொலர்கள் அபராதம்
24/06/2025 Duración: 02minமேற்கு ஆஸ்திரேலியாவில், புறாவைத் துன்புறுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்களுக்கு 130,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
‘இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம்’ – அமெரிக்க அதிபர்
24/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
அமெரிக்காவின் Bunker buster குண்டுகள் : ஈரானின் அணுசக்தி நிலைகள் முற்றாக அழிக்கப்பட்டதா?
23/06/2025 Duración: 10minஈரானின் அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு Bunker buster என்ற மிக சக்திவாய்ந்த குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இந்த Bunker buster குண்டுகள் பற்றியே எல்லா ஊடகங்களும் இப்போது பேசுகின்றன. இந்த குண்டுகளின் ஆற்றல் என்ன என்பது உட்பட இன்னும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றேனுகா துரைசிங்கம்.
-
Your guide to snow trips in Australia - ஆஸ்திரேலியாவின் பனிமலைகளைப் பார்க்கப்போகிறீர்களா? இதோ உங்களுக்கான பயண வழிகாட்டி
23/06/2025 Duración: 10minAustralia may be known for its beaches, but its snowfields offer unforgettable winter experiences—whether you're skiing, tobogganing, throwing snowballs, or seeing snow for the very first time. In this episode, we’ll guide you through everything you need to know for a snow trip, from what to pack and where to go, to how to stay safe, warm, and ready for fun. - பனிப்பொழிவைப் பார்க்கச்செல்லும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் எப்படி கதகதப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
23/06/2025 Duración: 09minஇந்தியா முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம்; தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தல்; மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு - தமிழக அரசியலில் ஏற்படுத்தும் பரபரப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
நாம் சாப்பிடும் எந்த பழங்கள், காய்கறிகளில் பூச்சிகொல்லி மருந்தின் அளவு அதிகம்?
23/06/2025 Duración: 11minசூப்பர் மார்கெட் எனப்படும் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் pesticides என்ற பூச்சிக் கொல்லிமருந்துகளின் residue என்ற எச்சங்கள் அல்லது வீழ்படிவு ஓரளவு இருக்கும். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் இந்த residue – எச்சங்களின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகளை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
தக்காளி கட்டுப்படியாகாத விலையில். தட்டுப்பாடு எப்போது நீங்கும்?
23/06/2025 Duración: 06minபல்பொருள் அங்காடிகளில் தக்காளி பற்றாக்குறையாக உள்ளது, அதன் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது மட்டுமன்றி, சில வாரங்களுக்கு அதன் கையிருப்பு மிகவும் குறைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு Northern Territoryயிலுள்ள செய்மதி தளம் உதவியதா?- கிரீன்ஸ் கட்சி கேள்வி
23/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மிகவும் அதிக சம்பளம் பெறும் ஆஸ்திரேலிய CEOக்கள் இவர்கள்தான்!
21/06/2025 Duración: 02minஆஸ்திரேலியாவின் ASX-பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் CEO - தலைமை நிர்வாக அதிகாரிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
21/06/2025 Duración: 07minஈரான் - இஸ்ரேல் போர்; காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள்; ஜி 7 உச்சி மாநாடு நிறைவு; Latam GPT எனும் லத்தீன் அமெரிக்க ஏஐ; ஆப்பிரிக்க நாடுகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள சீனா; மேற்கு ஆப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஜிகாதி குழு; நைஜீரியா மேய்ப்பர்கள்- விவசாயிகள் மோதல்; கென்யாவில் வன்முறை உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
20/06/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (15 –21 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 21 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How do Australia's new laws help prevent and respond to hate speech? - SBS Examines : வெறுப்புப் பேச்சைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன?
20/06/2025 Duración: 06minAccording to the United Nations, governments around the world are struggling to counter hate speech. - 2019 ஆம் ஆண்டில், வெறுப்புப் பேச்சுக்கான உத்தி மற்றும் செயல் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்தியது.
-
வசதியாக ஓய்வு பெறுவதற்கு எவ்வளவு Superannuation தேவை?
20/06/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டும் 30 வயதுடைய ஒருவர், வசதியாக ஓய்வு பெறுவதற்கு போதுமான நிலையான சூப்பர் சேமிப்புடன் ஓய்வு பெற முடியும் என ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள் சங்கத்தின் சமீபத்திய மிதிப்பாய்வு கூறுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
20/06/2025 Duración: 07minஇலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; வளர்ச்சி பெற்று வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை; 35 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘உலகின் வடிவத்தையே நாம் மாற்றுகிறோம்' - இஸ்ரேலிய பிரதமர்
20/06/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
யோகாவின் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன? கற்பதால் பலன் என்ன?
19/06/2025 Duración: 16minசர்வதேச யோகா தினம் சனிக்கிழமை (21 ஜூன்) கொண்டாடப்படும் நிலையில் யோகா குறித்து உரையாடுகிறார் யோகா கலையை கற்றுகொடுக்கும் ஆசிரியரான அனந்தநடராஜா பகீரதன் அவர்கள். ஆஸ்திரேலியாவின் கட்டிடக்கலைத் துறையில் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட பகீரதரன் அவர்கள் யோகா கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
ஏன் பலரும் மருத்துவ Specialistகளை பார்ப்பதை தள்ளிப்போடுகின்றனர்?
19/06/2025 Duración: 11minஆஸ்திரேலியாவில் ஒருவர் மருத்துவத் துறையில் நிபுணர் ஒருவரை – Specialist ஒருவரை பார்க்க விரும்பினாலும் அதை பலர் தாமதப்படுத்துகின்றனர். அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஒரு ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
சம்மதம் பெறாமல் செக்ஸ் வைத்தால் என்ன சிக்கல் வரலாம்?
19/06/2025 Duración: 11minபாலியல் உறவில் ஈடுபட அனுமதிப்பது அல்லது முடிவு செய்வது அல்லது sexual consent வழங்குவது – ஒருவரின் அடிப்படை உரிமை என்று பார்க்கப்படும் நிலையில், சம்மதமின்றி உறவில் ஈடுபடுவது ஏற்படுத்தும் சிக்கல்களை விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லலாமா?
19/06/2025 Duración: 11minகுழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். 2017ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.